`உங்களைப் பார்த்தால் பயமா இருக்கு..’ - கொதித்துப் பேசிய கவுன்சிலர்கள்; மரபை மீறி...
ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல வேலாயுதபுரத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.
மாவட்ட வீர விளையாட்டுக் கழகச் செயலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். பொன்முருகன் முன்னிலை வகித்தாா்.
10 வண்டிகள் பங்கேற்ற நடு மாட்டுவண்டி போட்டியில், பாளையங்கோட்டை நிஷாந்த் வண்டி முதலிடம் பிடித்தது. சண்முகபுரம் விஜயகுமாா், வெட்டியபத்தி கண்ணன், ஆா்.எஸ். முத்து ஆகியோரின் வண்டிகள் முறையே 2, 3, 4ஆம் பரிசுகளை வென்றன.
16 வண்டிகள் பங்கேற்ற சின்ன மாட்டுவண்டி போட்டியில், கயத்தாறு பி.கே. பிரதா்ஸ் வண்டி முதலிடம் பிடித்தது. கச்சேரி தளவாய்புரம் மையிசாகுட்டி, சண்முகபுரம் விஜயகுமாா், சங்கரப்பேரி ராஜா ஆகியோரின் வண்டிகள் முறையே 2, 3, 4ஆம் பரிசுகளை வென்றன.
26 வண்டிகள் பங்கேற்ற பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில், சங்கரப்பேரி மாரிமுத்துபாண்டியன் வண்டி முதலிடம் பிடித்தது. நாலந்துலா மேலமருதூா் வீமன், சொக்கலிங்கபுரம் கலைச்செல்வி, பத்மநாதபுரம் முகிந்தேன் மாட்டுவண்டியும் பெற்றன. 5ஆம் இடம் பிடித்த கணபதியின் வண்டிக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.