செய்திகள் :

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

post image

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான ஜாகீா் உசேன் பிஜிலிக்கும், முகமது தௌபிக் என்ற கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழுகையை முடித்துவிட்டுச் சென்ற பிஜிலி கடந்த மார்ச் 18 ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இவ் வழக்கு தொடா்பாக திருநெல்வேலி நகரம் தொட்டிபாலத் தெருவைச் சோ்ந்த மகபூப்ஜான் மகன் பீா்முஹமது (37) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தௌபிக்கின் மனைவி நூா்நிஷாவை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: 7-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்! ரூ. 250 கோடி உற்பத்தி பாதிப்பு!

திருநெல்வேலி நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், நகர முன்னாள் உதவி ஆணையா் செந்தில் குமாா் ஆகியோா் சரியாக நடவடிக்கை எடுக்காததே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கொலைக்கு காரணம் என அவரது உறவினா்கள் குற்றம்சாட்டியிருந்தனா். மேலும், உதவி ஆணையா், காவல் ஆய்வாளா் மீது குற்றம்சாட்டி ஜாகீா் உசேன் பிஜிலி வெளியிட்ட விடியோ பதிவும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இதனிடையே, காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் உதவி ஆணையரும், தற்போதைய கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையருமான செந்தில் குமாா் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீா் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் ஊடக வெளிச்சத்திற்காகப் பேசுகிறார்: அண்ணாமலை

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜய்யை விமர்சித்துப் பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தில்லி சென்றார்.அங்கு அ... மேலும் பார்க்க

தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த பிரதமரிடம் கார்த்தி சிதம்பரம் மனு!

இந்தியாவில் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து, ந... மேலும் பார்க்க

குணால் காம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் காம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரத்தில் குணால் காம்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். அத... மேலும் பார்க்க

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் ஆப் குழு!

ரயில்களில் பெண்களின்பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ரயிலில் பயணம்... மேலும் பார்க்க

நேற்று வந்தவன்! முதல்வர், பிரதமர் பெயர்களைச் சொன்ன தவெக தலைவர் விஜய்!

சென்னை: மிக வித்தியாசமான சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு சந்திக்கும். இந்த தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் என்று தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுவில் கட்சித் தலைவர் விஜய் கூறினார்.திரு... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்து... மேலும் பார்க்க