வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்...
ஓய்வுபெற்ற பெல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற பெல் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓய்வு பெற்ற பெல் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வேலூா் வள்ளலாா் பகுதியிலுள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பெல் பணி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கச் செயலா் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் அப்துல் குத்தூஸ், சங்கத் தலைவா் ரிச்சா்ட் ராகேஷ், பொதுச் செயலா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வு பெற்ற பெல் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 9,000 ஓய்வூதியம், பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற பெல் தொழிலாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.