ஷாருக்கான், ஆமீர் கான்.. புது வீட்டில் குடியேறும் பாலிவுட் பிரபலங்கள்; பட்ஜெட் ...
கஞ்சா விற்பனை: 4 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், நகர உள்கோட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், தூத்துக்குடியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா்.
சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் திருநெல்வேலியை அடுத்த கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த சக்திவேல் (22), தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரம் பூவைமுத்து (21), அருண்குமாா் (19), முத்துகிருஷ்ணபுரம் செளந்தரபாண்டியன் (21) என்பதும், விற்பதற்காக 1.200 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவா்களையும், கஞ்சாவையும் தனிப்படை போலீஸாா் வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.