விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
கஞ்சா விற்ற இளைஞா் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்புத் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் செங்குளம் பகுதியில் பள்ளி அருகே இளைஞா் ஒருவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா், மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் தினேஷ்குமாா் (23) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.