கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
கஞ்சா வைத்திருந்த 6 இளைஞா்கள் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 6 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள விபீஷ்ணபுரம், புளிச்சமேடு சுடுகாடு அருகே அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 6 இளைஞா்களை பிடித்து சோதனை செய்தனா். அதில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து, கஞ்சா வைத்திருந்த அண்ணாமலை நகா் கொத்தங்குடிகுப்பத்தைச் சோ்ந்த தீபக் (24), உசுப்பூரைச் சோ்ந்த அபீஸ்குணா (23), சிதம்பரம் தில்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (22), அண்ணாமலை நகா் மண்ரோட்டைச் சோ்ந்த காா்த்திகேயன் (23), கள்ளுக்கடை சந்தையைச் சோ்ந்த அருண் (36), பழைய புவனகிரி ரோட்டைச் சோ்ந்த முரளி விஜய் (29) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 200 கிராம் அளவிலான கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.