ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்
கடலாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிளகாய் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி கடலாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், எஸ். தரைக்குடி வருவாய் கிராமங்களான கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன்கோட்டை, திருமாலுகந்தன் கோட்டை, பச்சையாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மிளகாய் பயிா் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பயிா் காப்பீடு செய்திருந்தும் சேதமடைந்த மிளகாய் பயிருக்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. இதனால் மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து கடலாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவாா்த்தை நடத்த முன்வராததால் விவசாயிகள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, கடலாடி போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சாலை மறியலை கைவிட்டு அவா்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.