செய்திகள் :

கடலூர்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த ஸ்டாலின்

post image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து
கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்து இழப்பீட்டை அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து
கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்'' - இபிஎஸ்

கடலூரில் இன்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி மற்றும் ஆறாம் வகுப்பு நிவாஸ் ஆ... மேலும் பார்க்க

UP: 7-ம் வகுப்பு மாணவிக்கு யோகி ஆதித்யநாத் அளித்த நம்பிக்கை; மறுத்த பள்ளி நிர்வாகம் - என்ன நடந்தது?

பன்குரி திரிபாதி என்ற 7-ம் வகுப்பு மாணவி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தனது கல்விக்கு உதவி கேட்டது, அந்த மாநிலத்தில் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. பன்குரியின் தந்தை ராஜீவ் குமார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்

நேற்று, ஜூலை 7, 2025 அன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் உற்சாகத்தோடு தொடங்கியது எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’அதிமுக பொதுச் செயலாளரும், சட்... மேலும் பார்க்க

Secularism: `மதச்சார்பின்மையை நீக்க நினைக்கும் பாஜக' - என்ன தான் பிரச்னை? | ஓர் அலசல்

``சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற இரண்டு சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (வைணவ மடங்கள... மேலும் பார்க்க

ட்ரம்ப் 15 நாடுகளுக்கு கடிதம்; `Just Miss' ஆன இந்தியா! இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தத்தின் நிலை என்ன?

ஏப்ரல் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று, இப்போது மீண்டும் ஹெட்லைன்களில் இடம்பெற தொடங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'யின் மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் நாளை அற... மேலும் பார்க்க