செய்திகள் :

கடலூர்: ``பெண் என்பதால் புறக்கணிக்கிறீர்களா..?” - மாநகராட்சி அதிகாரிகளிடம் வெடித்த மேயர் சுந்தரி

post image

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி செலவில் வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, நேற்று காலை நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச் செல்வன் உள்ளிட்டவர்கள் அங்குச் சென்றனர். ஆனால் குறிப்பிட்டிருந்த நேரத்தை கடந்தும், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வரவில்லை.

கடலூர் மாநகராட்சி

அதில் கடுப்பான மேயர் சுந்தரி, ``அடிக்கல் நாட்டு விழா என்று அதிகாரிகள் கூறியதால்தான் இங்கு வந்தேன். ஆனால் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அதிகாரிகள் வருவது கிடையாது. நான் செல்போனில் அழைத்தாலும் எந்த அதிகாரிகளும் எடுப்பதில்லை. எத்தனையோ முறை என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள். நானும் போனால் போகிறதென்று பிரச்னை எதுவும் செய்யாமல் சென்று கொண்டிருக்கிறேன். இத்துடன் அதிகாரிகள் வராமல் இருக்கும் நான்காவது நிகழ்ச்சி இது.

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அசிங்கத்தைப் பொறுத்துக்கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறேன்” என்று செய்தியாளர்கள் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட கட்சிக்காரர்களிடம் கூறி நொந்து கொண்டார்.

கடலூர் மேயர் சுந்தரி

அதையடுத்து சிறிது நேரத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம், ``மாநகராட்சி திட்டப் பணிகளை துவக்கி வைக்க வேண்டும் என்று நீங்கள்தான் நேரம் குறிப்பிட்டு என்னை வரச் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் யாரும் வரவில்லை. கடந்த நான்கைந்து நிகழ்ச்சிகளாக தொடர்ந்து நீங்கள் இப்படித்தான் செய்கிறீர்கள். நான் பெண் மேயர் என்பதால் என் நிகழ்ச்சிகளை இப்படி புறக்கணிக்கிறீர்களா? வேலை ஆரம்பித்த பிறகு வந்து பார்ப்பீர்களா? அதன்பிறகு அது தப்பு இது தப்பு என்று சொல்வீர்களா?” என்று கடுகடுத்தார் மேயர் சுந்தரி. அதையடுத்து வணிக வளாகப் பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் மேயர்.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், கடலூர் தி.மு.க நகரச் செயலாளருமான பழக்கடை ராஜாவின் மனைவிதான் மேயர் சுந்தரி. அவரே மாநகராட்சி அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருப்பது ஆளும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்க... மேலும் பார்க்க

``பிரதான் திமிராக பேசுகிறார், பிளாக்மெயில் செய்கிறார், ஆனால்.." - முதல்வர் ஸ்டாலின் சொல்வதென்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி இருக்கிறார். அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் கு... மேலும் பார்க்க

US: ``ட்ரம்ப், ஜே.டி.வான்ஸ் இருவரும் புதினுக்காக செயல்படும் முட்டாள்கள்'' - சாடும் வான்ஸின் உறவினர்

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ட்ரம்புடன் அமெரிக்காவின் துணை அத... மேலும் பார்க்க

``மக்களவையின் மரபை மீறிய தர்மேந்திர பிரதானை பதவியிருலிந்து நீக்க வேண்டும்.." - திருமாவளவன் கோரிக்கை

நேற்று நடந்த நாடாளுமன்ற மக்களவையில் புதியக் கல்விக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டைச்... மேலும் பார்க்க

``ஜெயலலிதா இருந்திருந்தால்?..” - வைத்திலிங்கம் குறித்து சசிகலா நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்திப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது அதிமுக உரிமை மீட்பு குழுவான ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். உடல் நலக் குறைபாடு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு அருகே உள்ள... மேலும் பார்க்க

Health: சாலையோரம் அறுகம்புல் சாறு... குடித்தால் பலன் கிடைக்குமா?

சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அறுகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே... மேலும் பார்க்க