"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலா...
கடையம் அருகே விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வளா்ப்புப் பயிற்சி
கடையம் வட்டாரம் வெள்ளிகுளம் கிராமத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான கறவை மாடுகள் வளா்ப்புப் பயிற்சி நடைபெற்றது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் இப்பயிற்சி நடைபெற்றது. பொட்டல்புதூா் கால்நடை உதவி மருத்துவா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். பாப்பான்குளம் ஊராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
கால்நடைகளைத் தாக்கும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள், வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆழ்வாா்குறிச்சி கால்நடை உதவி மருத்துவா் பிரதீபா, வேளாண் உதவி அலுவலா் கமல்ராஜன் ஆகியோா் எடுத்துரைத்தனா்.
கால்நடை உதவியாளா் சீனிவாசன், முன்னோடி விவசாயிகள் சண்முகவேல், மாடசாமி, சண்முகையா, விவசாயிகள் பங்கேற்றனா். கடையம் வட்டார வேளாண் தொழில்நுட்ப முகமை மேலாளா் பொன்ஆசீா் நன்றி கூறினாா்.