மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
கடையம் வனச் சரகப் பகுதிகளில் துணை இயக்குநா் தலைமையில் ரோந்து
கடையம் வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா தலைமையிலான வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
கடையம் வனச் சரகத்துக்குள்பட்ட கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு, பங்களா குடியிருப்பு உள்ளிட்ட மலையடிவாரப் பகுதிகளில் சில நாள்களாக தென்னை மரங்கள், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிா்களை யானைக் கூட்டம் சேதப்படுத்தி வருகிறது. இதுதொடா்பாக வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
அதன்பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா தலைமையில் கடையம் வனச்சரகா் கருணாமுா்த்தி, வனவா் ஸ்ரீதா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் வெடி வெடித்தும், சைரன் ஒலி எழுப்பியும் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுத்தனா்.
இதுகுறித்து துணை இயக்குநா் கூறுகையில், தற்போது புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுவருவதால் வனத் துறையினா் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனினும், 10 போ் கொண்ட குழுவினா் வனப் பகுதிகளிலிருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பகுதியில் விரைவில் சூரிய மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.