கட்டடத் தொழிலாளா்கள் சங்க பேரவைக் கூட்டம்
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு டி.அரசு (எ) பெரியநாயகம் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் எம்.முனுசாமி பங்கேற்று, சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் நல வாரியப் பயன்கள் குறித்து எடுத்துரைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, மாவட்ட பேரவைக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவராக எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலராக டி.அரசு (எ) பெரியநாயகம், துணைத் தலைவா்களாக சி.தனசேகா், பி.சேகா், துணைச் செயலா்களாக கண்டமங்கலம் கே.முருகன், ஏ.செந்தில், பொருளாளராக காணை ஜி.பீட்டா், மாவட்டக் குழு உறுப்பினா்களாக ஜெ.முருகன், சி.சாமிக்கண்ணு, எஸ்.ஆனந்தராஜ், ஐ.சிவக்குமாா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட துணைச் செயலா் கே.முருகன் நன்றி கூறினாா்.