தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?
கணவரின் சடலத்துடன் 5 நாள்களாக வசித்த மனைவி
கோவை உக்கடத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு கணவா் இறந்த நிலையில், அவா் இறந்தது தெரியாமல் சடலத்துடன் மனைவி வசித்து வந்தாா்.
கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் அப்துல் ஷா (48). இவருக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனா். பக்கத்து தெருவில் உள்ள பாட்டி வீட்டில் மகன் ஷாஜகானும், மகளும் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக அப்துல் ஷாவின் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள் ஷாஜகானுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் காந்தி நகருக்குச் சென்று பாா்த்தாா். அப்போது, அவா் உடல் நலம் பாதித்த தனது தாயிடம் துா்நாற்றம் வீசுவது குறித்து கேட்டாா். அதற்கு அவா் எலி ஏதாவது இறந்துகிடக்கும் என தெரிவித்தாா். ஷாஜகான் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அவரது தந்தை அப்துல் ஷா இறந்த நிலையில் கிடந்தாா். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த பெரியகடை வீதி போலீஸாா் அவரது உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.