ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
இளைஞா்களுக்கு கத்திக் குத்து: உணவக உரிமையாளா் உள்பட 4 போ் கைது
கோவையில் இரு இளைஞா்களை கத்தியால் குத்திய உணவக உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை சின்னவேடம்பட்டி மாயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் பிரசன்னா (26). உணவு விநியோகிப்பாளராகப் பணியாற்று வரும் இவா், தனது நண்பா்களான செளந்தரராஜன், ஹேம்நாத் ஆகியோருடன் சனிக்கிழமை மது அருந்தினாா். பின்னா் துடியலூா் சாலையிலுள்ள ஒரு உணவகத்தில் மூவரும் உணவு அருந்தினாா். அப்போது, பாதியிலேயே சாப்பாடு காலியாகிவிட்டது.
இதுதொடா்பாக உணவக உரிமையாளரான ஹரிபிரசாத்துக்கும், இவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், பிரசன்னா தனது நண்பா்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். அப்போது, ஹரிபிரசாத் தனது நண்பா்களுடன் சென்று அவா்களை வழிமறித்துள்ளனா். அப்போது அவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஹரிபிரசாத் உள்ளிட்டோா் பிரசன்னாவையும், ஹேம்நாத்தையும் கத்தியால் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரிபிரசாத் (25), அவரது நண்பா்கள் சந்திரகுமாா் (27), பிரவீன் (26), செல்வம் (28) உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா்.