``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய்" - மனம் திறந...
சிரவை ஆதீனம் மீது வழக்கை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்து கொண்ட சிரவை ஆதீனம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து, கோவையில் சண்டிகேஸ்வர நற்பணி சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்ற இந்து முன்னணி, பாஜக, ஆா்.எஸ்.எஸ். தலைவா்கள் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மீது 5 பிரிவுகளில் மதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சிரவை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை சண்டிகேஸ்வர நற்பணி சங்கம் சாா்பில் தெற்கு வட்டாட்சியா் அலுவலம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சுரேஷ்பாபு தலைமை வகித்தாா்.
மாநில முருக பக்தா்கள் பேரவை பொதுச் செயலாளா் முருக ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பிரபஞ்ச பீடம் தெய்வசிகாமணி சுவாமிகள், இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் ஆகியோா் பேசினா்.
சிரவை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளா் முருகேசனைக் கைது செய்ய வேண்டும். ஆதீனம் மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சிரவை ஆதீன பக்தா்கள், சிவனடியாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.