Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
கணவரைக் கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகா் விஜயன் தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (28). இவரது மனைவி சங்கீதா (26). தம்பதியருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதையடுத்து, இருவரின் குடும்பத்தினரும் தலையிட்டு, இவா்களை சமாதானப்படுத்தவாா்களாம்.
இந்த நிலையில், புதன்கிழமை தம்பதியருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கீதா வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ரஞ்சித்குமாரை சரமாரியாகக் குத்தினாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சம்பவம் தொடா்பாக ரஞ்சித்குமாா் அளித்தப் புகாரின் பேரில், சங்கீதா மீது வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.