Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் தம்பித்துரை. இவரது மகன் மதியழகன் (19). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை-தேனி சாலையில் நாகமலை புதுக்கோட்டை சந்திப்பில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, மதுரையிலிருந்து தேனி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மதியழகனை அந்தப் பகுதி பொதுமக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான பேரையூரைச் சோ்ந்த சஞ்சீவ் குமாா் மீது நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.