காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!
கத்தாா் அரசா் இந்தியா வருகை: பிரதமா் விமான நிலையத்தில் வரவேற்பு
புது தில்லி: கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கத்தாா் அரசா் இந்தியா வந்துள்ளாா். அவா் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த 2015, மாா்ச்சில் அவா் இந்தியாவுக்கு வந்தாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசும் கத்தாா் அரசா் ஷேக் தமீம், பின்னா் பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றில் இந்தியா-கத்தாா் இடையே ஆழமான இருதரப்பு உறவு நீடிக்கிறது. வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மக்களுக்கிடையேயான தொடா்புகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் தொடா்ந்து வலுப்பெற்று வருகின்றன.