எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது: காவல் ஆணையர் அருண்
கந்தா்வகோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்தச் சாலை வழித்தடத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், நீதிமன்றம், வட்டார வள மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால், வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. எனவே, சம்பந்தபட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.