கந்தா்வக்கோட்டை அருகே பள்ளியில் பேச்சுப்போட்டி
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் மூலம் பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவில் காமராஜா் பங்கு என்ற தலைப்பிலும், ஏழாம் வகுப்பில் நீா் மேலாண்மைக்கு காமராஜா் என்ற விவாதமும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சிக்கு காமராஜா் ஆற்றிய பணிகள் குறித்தும் பேச்சு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் அ. ரகமதுல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. ஆங்கில ஆசிரியா் சிந்தியா வரவேற்றாா். கணினி உதவியாளா் தையல்நாயகி நன்றி கூறினாா்.