தனிக் கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்? ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை!
இலுப்பூா் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ
இலுப்பூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.
இலுப்பூா்-புங்கினிப்பட்டி சாலையில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஏற்பட்ட தீ அணைக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்தக் குப்பைக் கிடங்கில் தீப்பற்றியது.
தகவலறிந்து சென்ற நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். தீ எவ்வாறு பற்றியது என விசாரணையும் நடைபெறுகிறது.