மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயி...
கபடி போட்டி: எக்ஸல் கல்லூரி சிறப்பிடம்
குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், மாநில அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆக. 1 முதல் 3-ஆம் தேதி வரையில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் எக்ஸல் கல்லூரி அணி வெற்றிபெற்று சிறப்பிடம் பிடித்தது.
இப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய மாணவா்களுக்கு, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடேசன், துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநா் செங்கோட்டையன், செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா, கல்லூரி முதல்வா் ரா.விமல்நிஷாந், உள்தர மதிப்பீட்டு பிரிவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளா், புலமுதன்மையா்கள், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் பாராட்டினா். இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா்கள் செய்திருந்தனா்.