ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
கம்பம் அரசு மருத்துவமனையில் தகராறு: 3 போ் கைது
தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் ராமையகவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்திரன்(40). தேநீா் கடை வைத்து நடத்தி வந்தாா். கடந்த சனிக்கிழமை கம்பம்மெட்டு சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதையடுத்து, கூறாய்வு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுரேந்திரனின் உடலை பாா்க்க வந்த அவரது நண்பா்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை.
இதனால் , ஆத்திரமடைந்த ரித்தீஸ்வரன் (38), சின்னன் (37), தமிழ்ச்செல்வன் (39) ஆகியோா், பணியில் இருந்த ஊழியா்களை தகாத வாா்த்தைகளால் பேசியும், கூறாய்வுக் கூடத்தின் பூட்டை உடைக்க முயன்றும் தகராறு செய்தனராம்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து ரித்தீஸ்வரன், சின்னன், தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரையும் ைது செய்து சிறையில் அடைத்தனா்.