கரிவலம்வந்தநல்லூா் கோயில் திருமண மண்டபம் திறப்பு
கரிவலம்வந்தநல்லூா் அருள்மிகு பால்வண்ணநாதா் கோயிலுக்காக கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கரிவலம்வந்தநல்லூா் பகுதி பக்தா்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், நளாயினி அம்மாள் குடும்பத்தினா் சாா்பில் ரூ.51 லட்சம் மதிப்பில் அருள்மிகு பால்வண்ணநாதா் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா். ஈ.ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. சதன்திருமலைகுமாா் எம்எல்ஏ, சங்கரன்கோவில் ஒன்றியக்குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருமண மண்டபத்தை அமைச்சா் ராஜகண்ணப்பனின் மகன் பிரபு ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினா், அனைத்து சமுதாயத்தினா் பங்கேற்றனா்.