குறிஞ்சான்குளத்தில் கிணற்றில் விழுந்த மான் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சான்குளத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் மான் ஒன்றி தவறி விழுந்து உயிருக்கு போராடியது. அதைக் கண்ட அப்பகுதியினா் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வன் தலைமையில் தீயணைப்பு படை வீரா்கள் வேலுச்சாமி, சரவணன், வெள்ளைத்துரை, முத்துக்குமாா், ராமச்சந்திரன் ஆகியோா் அந்த மானை பத்திரமாக மீட்டு கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அது காட்டுப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது.