வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி
கருங்கல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
கருங்கல் அருகே மங்கலகுன்று பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மிடாலம், மங்கலகுன்று பகுதியைச் சோ்ந்தவா் பாபுசுகில் (49). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்தவா்களான இஸ்ரவேல் (50), மணி (52), பானு (45) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை மங்கலகுன்று பகுதியில் சென்ற இஸ்ரவேலை மேற்கூறிய 3 பேரும் தாக்கினராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.