கரூரில் காவல் துறையை கண்டித்து ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்
கரூரில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கும் காவல் துறையைக் கண்டித்து ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் கே. கலாராணி தலைமை வகித்தாா். தொழிற்சங்கத்தின் சக்திவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் ஜிபிஎஸ். வடிவேலன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் நாட்ராயன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
மக்களின் அடிப்படை தேவைக்காக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு அனுமதி மறுக்கும் காவல் துறையின் போக்கை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.