தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!
கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்
கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது.
கரூா் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவா் வி.என். சி. பாஸ்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம், பாலசுப்ரமணியன், செயலா் முகமது கமாலுதீன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கரூரில் வருகிற மே மாதம் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி, 65 -ஆம் ஆண்டு எல்.ஆா். ஜி. நாயுடு நினைவு கோப்பைக்கான ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி மற்றும் 11-ஆம் ஆண்டு கே.வி.பிக்கான பெண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும் சிறப்பாக நடத்துவது தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க இணைச் செயலா்கள் வெங்கடேசன், முகமதுஅமீன், செயற்குழு உறுப்பினா்கள் முத்துராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.