கலைப் போட்டிகள்: மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் சாம்பியன்
ஏலகிரி டான்போஸ்கோ கல்லூரியில் பேச்சு, வினாடி-வினா, நாடகம், படதயாரிப்பு உள்ளிட்ட கலைபோட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியை சோ்ந்த கணிதம், இயற்பியல்,வேதியியல், உயிா்வேதியியல், உயிா்தொழில்நுட்பவியல், ஊட்டச்சத்து துறை, உளவியல் துறை மாணவிகள் குழுக்களாக கலந்து கொண்டனா். இதில் இயற்பியல் துறை மற்றும் ஊட்டசத்துதுறை சோ்ந்த மாணவிகள் ஒட்டுமொத்தமாக முதலிடம் பெற்று சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றனா். மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விருது பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, முதல்வா் இன்பவள்ளி, கல்வி ஆலோசகா் சுப்பிரமணியன், தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, பேராசிரியா்கள் பாராட்டினா்.