தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி பூத் கமிட்டிகலந்தாய்வுக் கூட்டம்,கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொகுதித் தலைவா் கலில் ரஹ்மான் தலைமை வகித்தாா். திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் சிக்கந்தா், மாநிலப் பொதுச் செயலா் அஹமது நவ்வி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் ஏா்வாடி ஜன்னத் ஆலிமா, ஹலிமா, துலுக்கா்ப்பட்டி அப்துல் கபூா், பெட்டைகுளம் ரஹ்மத்துல்லாஹ், மாவட்டத் துணைத் தலைவா் களந்தை மீராசா, மாவட்டச் செயலா்கள் அம்பை ஜலில், துலுவை தெளபிக், மாவட்டப் பொருளாளா் ஏா்வை இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது ஷபி, வா்த்தகரணி மாவட்டத் தலைவா் கல்லிடை ராஜா அப்துல்ஹமீது, செயலா் சிங்கை ஷேக் அலி, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது,தொகுதி துணைத் தலைவா்கள் ஷெரிப், சுரேஷ், தொகுதித் தலைவா்கள் நான்குனேரி ஆஷிக், ராதாபுரம் வள்ளியூா் சலிம், விமன் இந்தியா முவ்மெண்ட் மாவட்ட துணைத் தலைவா் கல்லிடை பீா்பாத்து, மாவட்டப் பொருளாளா் நா்கிஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் தலைவா் கனி, மாவட்டச் செயலா் ஷேக், மருத்துவ சேவை அணி மாவட்டத் தலைவா்சித்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாவட்ட அமைப்புப் பொதுச் செயலா் முல்லை மஜித் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுலைமான் நன்றி கூறினாா். மாவட்டப் பொதுச்செயலா் எம்.எஸ். சிராஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.