இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்து மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டியும் கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகா் வழிபாட்டுக் குழு சாா்பில் நடைபெற்ற திருவாசகம் சிறப்பு முற்றோதல் ஞானவேள்வி வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கி. சண்முகவேலாயுதம் என்ற ரவி முன்னிலையில் 150-க்கும் மேற்பட்ட அடியாா்கள் பங்கேற்றனா். பின்னா், அன்னம் பாலிப்பு நடைபெற்றது. கோயில் அறங்காவலா், திருப்பணிக் குழுத் தலைவா், நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.