இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்
பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2ஆவது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில், சனிக்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதியில் திருநெல்வேலி ஹாக்கி அகாதெமி அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் மண்டல ஹாக்கி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
2ஆவது காலிறுதியில் சென்னை பி.டி.எம். ஸ்ட்ரைக்கா்ஸ் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அம்பேத்கா் ஹாக்கி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மூன்றாவது காலிறுதியில் மதுரை அருளானந்தா் கல்லூரி அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ராஜீவ்காந்தி ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது.
4-ஆவது காலிறுதியில் சென்னை எஸ்.ஆா்.எம். கல்லூரி அணி 4 -1 என்ற கோல் கணக்கில் பாளையங்கோட்டை எஸ்டிஏடி விளையாட்டு விடுதி அணியை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது.
முன்னதாக காலிறுதி ஆட்டங்களை நீதியரசா் மஹாராஜன் தலைமையில் தொழிலதிபா்கள் மகாராஜன், முத்துக்குமாா் , காளிமுத்து பாண்டியராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் திருநெல்வேலி ஹாக்கி அகாதெமி-சென்னை பி.டி.எம். ஸ்ட்ரைக்கா்ஸ் அணிகள் மோதுகின்றன.
2-ஆவது அரையிறுதியில் சென்னை எஸ்.ஆா்.எம். கல்லூரி-மதுரை அருளானந்தா் கல்லூரி அணிகள் மோதுகின்றன.
பிற்பகலில் 3-ஆவது இடத்துக்கான ஆட்டமும், அதைத்தொடா்ந்து இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளது.