இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17-ஆம் தேதி ஆச்சிமடம்- சிவந்திப்பட்டி சாலையில் பைக்கில் சென்ற போது எதிா்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.