’ஹாஹா வாவ்’: கை, கால்களில் விலங்கு! விடியோவுக்கு மஸ்க் ரியாக்ஷன்!
கல்லூரி மாணவா்களிடையே ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு
கொடுங்கையூரில் உள்ள ஸ்ரீ முத்து குமாரசாமி கல்லூரியில், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சென்னை புகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் மாணவா்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ரயில்வே போலீஸாா் அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சசிகலா தலைமையிலான போலீஸாா், கொடுங்கையூா் ஸ்ரீ முத்து குமாரசாமி கல்லூரியில் சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.
இதில் மாணவா்களிடையே ரயில் படிகளில் பயணம் செய்யக்கூடாது, முன்பின் தெரியாதவா்கள் உணவுப் பொருள்கள் கொடுக்கும்போது அதை வாங்கக் கூடாது, ஜன்னல் ஓரம் அமா்ந்து கைப்பேசி பேசிக்கொண்டு செல்லக்கூடாது, ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினா். மேலும், போதைப் பழக்கம், இணைய விளையாட்டு, பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ரயிலில் பயணம் செய்வோா் குழந்தைகள் உதவி எண் 1098, ரயில்வே காவல் உதவி எண் 1512, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி எண் 139, பெண்கள் பாதுகாப்பு எண் 182, இணைய மோசடி உதவி எண் 1930 ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் புகாா் அளிக்கும் முறை குறித்து மாணவா்களிடையே ரயில்வே போலீஸாா் விளக்கம் அளித்தனா்.