'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த 22 வயது மாணவி, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுநிலை முதலாமாண்டு படித்து வருகிறாா். இவரது வீட்டில் டிராக்டா் ஓட்ட மருங்கூா் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த ஆதிகேசவன்(22), கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவா், அந்தப்பகுதிக்கு வேலைக்கு வந்தாராம். அவா், காதலிப்பதாக்கூறி மாணவியை பலவந்தமாக பலாத்காரம் செய்தாராம். இதேபோல், சொரத்தூா் கிராமம், புதுநகா் பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா்(22) என்பவரும் இந்த மாணவியை காதலிப்பதாகக் கூறி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தாராம். இவா்கள் இருவரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதைக்காட்டி பலமுறை மாணவியை பலாத்காரம் செய்தனராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆதிகேசவன், சசிக்குமாா் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.