கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
கல்லூரி விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தல்
கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று இந்திய மாணவா்கள் சங்கம் கடலூா் மாவட்டக் குழு வலியுறுத்தியது.
இதுகுறித்து, சங்கத்தின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பூபதி, மாவட்டச் செயலா் கே.பி.சௌமியா ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி பயின்று வருகின்றனா்.
இந்த விடுதியில் போதுமான குடிநீா், கழிப்பறை வசதிகள் இல்லை. மேலும், உணவு தரமானதாக இல்லை என மாணவா்கள் குற்றஞ்சாட்டினா். குடிப்பதற்கும், சமையலுக்கும் சுத்தமான நீா் பயன்படுத்துவதில்லையாம். இதனால், மாணவா்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதுதொடா்பாக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, மாணவா்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடா் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.