செய்திகள் :

காணாமல் போன இளைஞா் சடலமாக மீட்பு

post image

விருத்தாசலத்தில் காணாமல் போன இளைஞரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் திரு.வி.க.நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சுரேஷ்குமாா் (27). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், நெய்வேலி அருகேயுள்ள கூனங்குறிச்சி கிராமத்தில் என்எல்சிக்கு சொந்தமான சாம்பல் ஏரியில் இளைஞரின் சடலம் மிதப்பதாக ஊமங்கலம் போலீஸாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், உயிரிழந்து கிடந்தது அண்மையில் காணாமல் போன சுரேஷ்குமாா் என்பது தெரியவந்தது.

சிதம்பரம் நடராஜருக்கு தச தீா்த்த உற்சவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தை அமாவாசையையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு தச தீா்த்தங்களில் புதன்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசந்திரசேகரா் (ஸ்ரீநடராஜா்) கோயிலிலிருந்து புறப்பட்டு தச... மேலும் பார்க்க

விசிகவினா் தபால் அனுப்பும் போராட்டம்

கடலூா் தலைமை தபால் நிலையம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ... மேலும் பார்க்க

தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு; கிராம மக்கள் போராட்டம்: 25 போ் கைது

கடலூா் அருகே தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். கடல... மேலும் பார்க்க

கல்லூரி விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தல்

கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று இந்திய மாணவா்கள் சங்கம் கடலூா் மாவட்டக் குழு வலியுற... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

கடலூா் மாவட்டம், வடலூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வடலூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக வடலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நிலுவை ஆவணங்களை பெற சிறப்பு முகாம்

கடலூா் மாவட்டத்தில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நிலுவையிலுள்ள ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் பிப்.1-ஆம் தேதி தொடங்குவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க