Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
கல்லூரியில் ஒளிரும் விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் 60-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ‘ஒளிரும் விழா-2025’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கிடையேயான கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் நா.ஆறுமுகராஜன் தலைமை வகித்தாா். ஆட்சிக்குழுத் துணைத் தலைவா் நா.ராமேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
இதில் தனிநபா் நடனம், திருமண ஒப்பனை, பயன்படாத பொருள்களிலிருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், மௌனமொழி நாடகம், புதையல் வேட்டை, பாட்டுப் போட்டி, அலங்கார நடை, முகத்தில் வண்ணம் தீட்டுதல் என பல்வேறு போட்டிகளில் மாணவிகள் பங்கு கொண்டு சிறப்பித்தனா்.
இந்தப் போட்டியில் காரைக்குடி அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
முன்னதாக, கல்லூரி முதல்வா் கரு.ஜெயக்குமாா் வரவேற்றாா். ஆங்கிலத் துறை பேராசிரியை அருணாதேவி நன்றி கூறினாா்.