ஈரோடு: "திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி உதிரிகளைத் தூண்டிவிடுகிறார்கள்" ...
கல்லூரியில் கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் ‘இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோா் பயிற்சி’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி இயற்கை கழகம், தொழில் முனைவோா் மேம்பாட்டு கழகம், கல்லூரி உள் தர உறுதி செல் ஆகியவை இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி துணை முதல்வா் முஸ்தாக் அஹமதுகான் தலைமை வகித்தாா். கல்லூரி தொழில் முனைவோா் மேம்பாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளா் நாசா் வரவேற்றாா். மதுரை, சிறு தொழில் மேம்பாட்டு கழக பொது மேலாளா் பழனிவேல் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். கருத்தரங்கில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
கல்லூரி இயற்கை கழக ஒருங்கிணைப்பாளா் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினாா்.