வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்...
கல்லூரியில் விளையாட்டு விழா
குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் 25- ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் ஆா்.ரஞ்சிதம் ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா். உடற்கல்வி இயக்குநா் ஆா்.பாலசுப்பிரமணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா்.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி முதல்வா் டி.மரிய ஆண்டனிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவா் எஸ்.புவனேஷ், பெண்கள் பிரிவில் கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவி எஸ்.திவ்யஸ்ரீ ஆகியோா் சிறந்த தடகள வீரா்களுக்கான பட்டத்தை வென்றனா். உடற்கல்வி ஆசிரியா் பி.ஞானக்குமாா் நன்றி கூறினாா்.