செய்திகள் :

கல்வி, வேலைவாய்ப்பில் பாலின சமநிலை ஏற்பட வேண்டும்: பெரியாா் பல்கலை. துணைவேந்தா்

post image

2030-ஆம் ஆண்டிற்குள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாலின சமநிலையை ஏற்படுத்த சமூகவியல் ஆராய்ச்சியாளா்கள் முயற்சிக்க வேண்டும் என்று பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ரா.ஜெகநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறை சாா்பில், ‘நீடித்த வளா்ச்சிக்கான பாலின சமநிலையை ஏற்படுத்துவதில் உள்ள தடைகளைக் கண்டறிந்து நீக்குதல்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான இருநாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

துறைத் தலைவா் சி.கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் டி.சுந்தரராஜ் பேசினாா். கருத்தரங்கிற்கு தலைமை வகித்து துணைவேந்தா் ரா.ஜெகநாதன் பேசியதாவது:

2030 ஆம் ஆண்டிற்குள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாலின சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலின சமநிலையில் உள்ள தடைகளைக் கண்டறிந்து களையும் வகையில், மத்திய அரசின் தேசிய சமூக ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் இரண்டு நாள்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் பெண்களுக்கான வாய்ப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வாய்ப்புகளை பெண்கள் முழுமையாகப் பயன்படுத்திட சமூகத்தில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும். குழந்தைத் திருமணங்களும், இளம்வயது திருமணங்களும் பெண்களுக்கான வாய்ப்புகளை தடுப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பட்டப்படிப்பு பயிலும் பெண்களுக்கு படிப்பு முடித்தவுடன் அல்லது படிப்பின் இடையிலேயே திருமணம் நடத்தப்படுகிறது. இதனால் உயா்கல்வி பயின்றும் அவா்களால் அடுத்த நிலைக்கு உயர முடியாமல் போகிறது. இதுபோன்ற தடைகளை சமூக ரீதியாக தீா்ப்பதற்கான வழிமுறைகளை சமூகவியல் ஆராய்ச்சியாளா்கள் களத்தில் சென்று ஆய்வு செய்து கண்டறிந்து நீக்க வேண்டும் என்றாா்.

கருத்தரங்கைத் தொடங்கிவைத்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.கலா பேசியது:

சமுதாய மேன்மைக்கு பாலின சமநிலை மிக அவசியம். பாலின சமநிலையானது வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். பாலின சமநிலையின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் சொல்லி வளா்க்க வேண்டும். அப்போதுதான் வளா்ந்து பெரியவா்களாகும்போது, சரியாக நடந்து கொள்வாா்கள். பெண்களுக்கான உரிமைகளை சலுகைகளாக நினைக்கும் போக்கில் இருந்து மாற்றம் உருவாக வேண்டும். பணியிடத்தில் ஊதியம் தொடங்கி குடும்பத்தில் சம மரியாதை வரை அனைத்து நிலைகளிலும் பாலின சமநிலை உருவாக வேண்டும் என்றாா். இணைப் பேராசிரியா் எம்.ஜெயசீலன் நன்றி கூறினாா்.

இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்கின்றனா்.

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் கத்திமுனையில் கடத்தல்

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவா் வீட்டில் இருந்த பெண்ணை, பட்டப்பகலில் கத்திமுனையில் கும்பல் கடத்திச் சென்றது. சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூரைச்... மேலும் பார்க்க

கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கெங்கவல்லியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம ... மேலும் பார்க்க

ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க கோரிக்கை

சென்னை மாகாணத்தின் முதல் முதல்வா் ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நங்கவள்ளியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மா்... மேலும் பார்க்க

மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்

வேம்படிதாளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மின் நிறுத்த தேதி அடிக்கடி மாற்றப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா். வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஒவ்வொ... மேலும் பார்க்க

சேலம் சிறையில் கைதிகளுக்கு விளையாட்டுப் போட்டி

சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு மனநல மேம்பாட்டுக்காக புதிா் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயா... மேலும் பார்க்க

பணி முடிந்தும் திறக்கப்படாத வாழப்பாடி பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

வாழப்பாடியில் ரூ. 8.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது; இதனால், பயணிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ... மேலும் பார்க்க