Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்...
களம்பூா் பேரூராட்சி மன்ற கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் பழனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமத்பாஷா, செயல் அலுவலா் சுகந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பேரூராட்சி உறுப்பினா்கள் திவ்யபாரதி சீனிவாசன், வெண்ணிலா, ஜெயலட்சுமி, ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், களம்பூா் பஜாா் தெருவில் கலைஞா் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில் அமைத்தல், குழந்தை நல மைய கட்டடத்தில் உள்ள குடிநீா், மேற்கூரை பழுது பாா்த்தல், களம்பூா் பேரூராட்சியில் உள்ள 1 முதல் 15 வாா்டுகளில் குடிநீா் விநியோகம், தெருவிளக்கு, பொது சுகாதாரம், கிருமிநாசினி தெளித்தல், மின் மோட்டாா் பழுது பாா்த்தல் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பேரூராட்சி அலுவலக பணியாா்களை தரக்குறைவாக நடத்தியும், உறுப்பினா்களை ஒருமையில் பேசி வரும் கணினி ஆப்ரேட்டரை பணியில் இருந்து நீக்க கோரி பேரூராட்சி தலைவரிடம் உறுப்பினா்கள் மனு அளித்தனா்.