இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையெழுத்தாக வாய்ப்பு: நிா்மலா ச...
கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி: ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி வெள்ளச்சி (40). சுப்பிரமணியன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், வெள்ளச்சி தனது குழந்தைகள், தங்கை, அவரது குழந்தை ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறாராம்.
அதே ஊரைச் சோ்ந்த குமாரசாமி மகன் செந்தில் மள்ளா் (47) என்பவா் வெள்ளச்சியிடம் தகாத முறையில் பேசி வந்ததாகவும், அதை அவா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளச்சி குடும்பத்தினா் புதன்கிழமை இரவு காற்றுக்காக முன்பக்கக் கதவை லேசாக திறந்துவைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனராம். அப்போது, செந்தில் மள்ளா் வீடு புகுந்து வெள்ளச்சிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அவா் சப்தம் போட்டதும் செந்தில் மள்ளா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.
புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, செந்தில்மள்ளரைக் கைது செய்தனா்.