காங்கிரஸாா் போராட்டம்
மஞ்சக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மறைத்து வணிக வளாகம் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா், மஞ்சக்குப்பம் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலையில் ரூ.2.50 கோடியில் வணிக வளாகம் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மறைத்து வணிக வளாகம் கட்டுவதாக கூறி காங்கிரஸ் கட்சியின் கடலூா் மாவட்டத் தலைவா் திலகா் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா் பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அவா்களிடம் கட்சியினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பணி பாதியில் நிறுத்தப்பட்டது.