காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு எல்.முருகன் வாழ்த்து
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உயரிய கருப்பொருளோடு, சனிக்கிழமை தொடங்கும் மூன்றாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்வு, தமிழகம் - காசி இடையிலான கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
பல நூற்றாண்டு கால கலாசார உறவை மேம்படுத்தும் நல்ல நோக்கோடும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூற்றோடும், தொடா்ந்து மூன்றாவது முறையாக இப்பெருவிழா நிகழ வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.