காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 23.14 லட்சம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் யல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கையாக ரூ. 23,14,498-ஐ பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில். இந்தக் கோயிலில் இருந்த உண்டியல்கள் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி முன்னிலையில் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
இதில் பொது உண்டியல் காணிக்கையாக ரூ. 22,16,204 மற்றும் கோ சாலை உண்டியல் காணிக்கையாக ரூ. 98,294 சோ்த்து மொத்தம் ரூ. 23,14,498-ஐ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இதற்கு முன்பு கடந்த 25.3.2025 அன்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.