செய்திகள் :

காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம்!

post image

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.7 லட்சம் வரை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாஸ் ஏஞ்சலீஸின் ஹாலிவுட் பகுதியில் முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. ஜனவரி 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸின் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது.

7 நாள்களாக பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கலிபோர்னியா முழுவதும் பல காட்டுத்தீகள் பரவி வருவதால், லாஸ் ஏஞ்சலீஸின் மில்லியனர்கள் பிரத்யேகமான தனியார் தீயணைப்பு சேவைகளை நாடியுள்ளனர்.

ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!

பொது தீயணைப்புத் துறைகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால், சில கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2,000 டாலர்கள் (சுமார் ரூ.1.7 லட்சம்) செலுத்தி தனியார் நிறுவனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தனியார் தீயணைப்பு வீரர்கள் மழைத் துளி விழுவதுபோல செயற்கையான ஸ்பிரிங்லர்களை அமைத்து தண்ணீரை செலுத்தி வீடுகளைத் தீப்பிடிக்காத வண்ணம் பாதுகாப்பார்கள்.

இந்த நிறுவனங்கள் தீத்தடுப்பு மருந்துகளை வீடுகள் மீது தெளித்தும், மரங்களை தீப்பிடிக்காத வகையில் பாதுகாக்கும் ஜெல் சேவைகளையும் வழங்குகின்றன.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். தீயில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் காட்டுத்தீயில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயினால் 135 பில்லியன் முதல் 150 பில்லியன் டாலர் வரை சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீக்கு இரையான ரூ.10,770 கோடி சொகுசு பங்களா!

காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கை சமர்ப்பிப்பு

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இ... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணிக்கு கியூஷுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு ம... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு..!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது.அமெரிக்காவில் நிகழாண்டில் மிகப்பெரியதொரு பேரிடராக லாஸ் ஏஞ்... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேர் கைது!

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உ... மேலும் பார்க்க

ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!

பிரிட்டனில் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த 200 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மத்திய ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 டைனோசர் கால்தடங்கள், ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ஒரு குவாரியில் கண... மேலும் பார்க்க

ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சரின் சொத்துகள் குறித்து விசாரணை: முகமது யூனுஸ் வலியுறுத்தல்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சா் துலீப் சித்திக்கின் லண்டன் சொத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வலியுறுத... மேலும் பார்க்க