இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
காணும் பொங்கல்: சென்னையில் 500 சிறப்புப் பேருந்துகள்
சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வியாழக்கிழமை பொழுதுபோக்குக்காக பல்வேறு இடங்களுக்குச் சென்றுவர ஏதுவாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாமல்லபுரம், கோவளம், எம்ஜிஎம், வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் விளையாட்டு பூங்கா மற்றும் மெரீனா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில், அட்டவணை பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
மேலும், பயணிகளைப் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி, இறக்கவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பரிசோதகா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.