எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
காமநாயக்கன்பாளையம்- சுல்தான்பேட்டை சாலையில் அதிக வேகத் தடைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம்-சுல்தான்பேட்டை வரையிலான சாலையில் அதிக அளவிலான வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனா்.
பல்லடம் - பொள்ளாச்சி மாநில நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலான சாலை பகுதி 2.5 கிலோ மீட்டா் தொலைவு உள்ளது. இந்த பகுதியில் 21 வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் வாகனங்களில் செல்வோா் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், காமநாயக்கன்பாளையம்- சுல்தான்பேட்டை வரையிலான சாலையில் 21 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது. இதனால் விபத்து குறையவில்லை மாறாக விபத்துகள்தான் அதிகரித்துள்ளன. எனவே தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்றி வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணிக்க வழிவகை செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.