திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
காமராஜா் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் 3 ஆரம்பப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் என நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்யாறு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி, கிரிதரன் பேட்டை தொடக்கப் பள்ளி, வடுகப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் செய்யாறு டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 123-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
மேற்படி பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.ரகுராமன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் கே. ஏழுமலை, பொருளாளா் எம்.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியின் போது 3 பள்ளிகளில் பயிலும் சுமாா் 200 மாணவா்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம், பேனா மற்றும் இனிப்பு என வழங்கினா்.
நிகழ்ச்சியில் செய்யாறு டவுன் ரோட்டரி சங்க சாசனத் தலைவா் கே.நல்லாண்டி, முன்னாள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எம். விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.